இந்திய முட்டைகளை சந்தையில் விற்பனை செய்ய அனுமதி

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, கடந்த 26 ஆம் திகதி ஒரு மில்லியன் முட்டைகளுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது.

இந்த முட்டை மாதிரிகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அனுமதி பெறப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்