
கனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 84 மில்லியன் பெறுமதியான சிறப்பு கஞ்சா
கனடாவில் இருந்து யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 84 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் சிறப்பு கஞ்சா அடங்கிய மரப்பெட்டிகளை பேலியகொட லக்சிறி சரக்கு முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினால் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சரக்கு சேவை மூலம் கனடாவில் வசிக்கும் ஒருவரால் அனுப்பப்பட்ட இரண்டு மரப்பெட்டிகளின் அடிப்பகுதியில் 24 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிரம் குஷ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக பொருட்களின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் வருகை தந்திருந்த போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

