
19 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை : கடுமையான மின்னல் தாக்கம்
இடி மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை 19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
இன்று மாலை அல்லது இரவு வேளையில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
பொதுமக்கள் மழை மற்றும் மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மரங்களுக்கு அடியில் மற்றும் பொது வெளிகளில் நடமாடுவதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
