
யால சரணாலயத்தில் யானை உயிரிழப்பு
யால தேசிய சரணாலயத்தில் இருந்த மிகப்பெரிய தந்தம் கொண்ட யானையான ‘தல கொட்டா’ உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு அருகில் உயிரிழந்த நிலையில், யானையின் சடலம் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த (40 – வயது) யானை நீண்ட நாட்களாக நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை அளித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
