தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 3 மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் 355 தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 10 வீதமானவர்கள் சிறுவர்கள் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்