ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள் – ஜீவன் தொண்டமான்

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  “பல்லின சமூகம் வாழும் இலங்கையில் பொருளாதாரம் மேம்பட்டு – பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் இன ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

எவ்வளவுதான் நெருக்கடிகள் வந்தாலும் ஈகை குணத்தை அவர்கள் கைவிட்டதில்லை. இஸ்லாம் மதம் போதிக்கும் நல்ல விடயங்களை பின்பற்றி வாழ எத்தனிப்பவர்கள். அந்தவகையில் இம்முறை பெருநாளை கொண்டாடும் இலங்கை மற்றும் உலகவாழ் முஸ்லிம் மக்களுக்கு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்