6வது ரோல்பால் உலகக் கோப்பை போட்டி : இந்தியாவிற்கு பயணமாகும் இலங்கை வீரர்கள்
6வது ரோல்பால் (RollBall) உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் புனே நகரில் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை ரோல் பால் சம்மேளனத்தின், விளையாட்டு வீரர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை விளையாட்டு துறை அமைச்சின், செயலாளர் மகேசன் தலைமையில் நடைபெற்றது .
இதன்போது, ரோல் பால் சம்மேளனத்தின், பொதுச் செயலாளர் பி தவேந்திரன், உப தலைவர் ஆர் நெவில் பிரேந்திரன், பொருளாளர் விக்டர், உத்தியோகத்தர்கள், வீரர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்