திருமண நாளன்று தாலிக்காக காத்திருந்த மணமகன் வீட்டாருக்கு கிடைத்த அதிர்ச்சி
-யாழ் நிருபர்-
தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவான நபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.
அவற்றின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது, அவரது கடை மூடப்பட்டு இருந்தது.
அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட போது, தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்தது.
அதனை அடுத்து மணமகன் வீட்டார், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்