24 மணித்தியாளங்களில் உச்சம் தொட்ட அதிவேக நெடுஞ்சாலை வருமானம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் நேற்று சனிக்கிழமை 35 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளை விட்டு வெளியேறிய வாகனங்களின் எண்ணிக்கை 126,760 என இதன் இயக்குநர் ஜெனரல் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாளங்களில் கிடைத்த வருமானம் 34,974,100 ரூபாவாகும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.