பொலனறுவை விபத்தில் இரு பெண்கள் பலி

பொலனறுவைப் பகுதியில் லொறி ஒன்றும் உழவு இயந்திரமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை, ஓனேகம வீதியின் வலேகடே சந்தியில் இன்று சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இடம்பெற்ற போது உழவு இயந்திரத்தில் 10 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலனறுவை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.