பஸ் விபத்தில் 12 இளைஞர்கள் பலி

இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை பஸ் பள்ளத்தில் விழுந்து கோர விபத்துக்குள்ளானதில் 12 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

புனேவில் இருந்து மும்பை நோக்கி பாஜி பிரபு வாடக் என்ற அமைப்பை சேர்ந்த சுமார் 40 பேர் ஒன்றாக இணைந்து பயணம் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி பஸ்சில் பயணம் செய்த 12 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் 18 தொடக்கம் 25 வயதை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.