துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி : 9 பேர் காயம்
துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி : 9 பேர் காயம்
அமெரிக்காவின் கென்டக்கி பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது உயிரிழந்தவர்கள் 40 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்ததாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த காணொளி சில நிமிடங்களில் நீக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.
23 வயதான ஒருவரே துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். தாக்குதல் நடாத்தப்பட்டு மூன்று நிமிடங்களில் பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது துப்பாக்கி சூட்டை நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்