சமூக வலைத்தளத்தில் தகவல்களை பகிர வேண்டாம்
சமூக வலைத்தளத்தில் தகவல்களை பகிர வேண்டாம்
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணங்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமூக ஊடக தளங்களில் பகிரபடும் தகவல்களை பயன்படுத்தி குற்றவாளிகள் வீடுகளுக்குள் புகுந்து திருடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் சிசிடிவி கருவிகளை இயக்கவும், கொள்ளை சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்