வங்கிகளில் இன்று டொலர் மாற்று விகிதங்கள்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாவாகவும் மற்றும் விற்பனை பெறுமதி 325 ரூபாவாகவும் உள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 309.66 ரூபாவாகவும் மற்றும் விற்பனை பெறுமதி 331.96. ரூபாவாகவும் உள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310.05 ரூபாவாகவும் மற்றும் விற்பனை பெறுமதி 327.50 ரூபாவாகவும் உள்ளது.