முன்னாள் காதலன் கொடுத்த பரிசு : மணமகன் உட்பட மூவர் உயிரிழப்பு

முன்னாள் காதலன் கொடுத்த பரிசு : மணமகன் உட்பட மூவர் உயிரிழப்பு

திருமணப் பரிசாகப் பெற்ற ஹோம் தியேட்டர் சிஸ்டம் வெடித்துச் சிதறியதில் மணமகனும், அவரது சகோதரனும் உயிர் இழந்த சம்பவம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

புதுமணத் தம்பதிகளுக்கு திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்திற்கு மின் இணைப்பு கொடுக்கச் சென்றபோது அது வெடித்து சிதறியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரிசாக பெறப்பட்ட ஹோம் தியேட்டர் அமைப்பில் சில வெடிபொருட்கள் இருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்தை இவர்களுக்கு பரிசளித்ததாக கூறப்படும் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காதலி வேறு இளைஞனை மணந்ததால் ஏற்பட்ட கோபமே இச்சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 18 மாத குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்