கலால் அதிகாரிகளின் அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை இடைநிறுத்துவதற்கு கலால் திணைக்கள தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
கொடுப்பனவுகள் தொடர்பிலான தமது கோரிக்கைகளுக்கு ஒருமாத காலத்துக்குள் தீர்வினை வழங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்தமையே, இதற்கான காரணம் என சங்கத்தின் செயலாளர் நிரோஷ் ஜயக்கொடி தெரிவித்தார்.