மாணவர்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில் அனுமதி
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஆறாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முதியன்சலாகே நிரஞ்லா ஜெயவீர என்ற பெண் தனது மகனை பதினோராம் தர மாணவர்கள் தாக்கியதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் மாணவர்களும், தாக்குதலுக்குள்ளான மாணவரொருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்