தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களுடன் இருவர் கைது
திவுலபிட்டிய நகரில் வைத்து தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களை லொறியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வகை விவசாய இரசாயனங்கள் அடங்கிய 1950 பொதிகள் காணப்பட்டதாகவும், இவற்றின் பெறுமதி 1,672,500 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவர்கள் தியத்தலாவ மற்றும் வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 45 வயது மதிக்கதக்கவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்