3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா, வெள்ளை சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி,
230 ரூபாவாக இருந்த கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 210 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
220 ரூபாவாக இருந்த வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
340 ரூபாவாக இருந்த பருப்பு கிலோ ஒன்றின் விலை 310 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.