இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விநியோகம்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த முட்டைகள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை, என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று சனிக்கிழமை முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை சாலையோரங்களில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற விவசாய பொருட்களை விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.