இன்று முதல் பால்மாவின் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
400 கிராம் பால் மாவின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.