விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கஜமுத்துடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

 

எட்டாம்பிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கஜமுத்து ஒன்று பசறை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பசறை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடிப் படையினருக்கு தம்பதெனிய மஹ ஓய பிரதேசத்தில் இருந்து செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதிக்கு விற்பனைக்காக கஜமுத்து கொண்டு வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

இதன்போது 59 வயதுடைய தம்பதெனிய மஹ ஓய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஜமுத்துவும், சந்தேக நபரும் எட்டாம்பிடிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக எட்டாம்பிடிய பொலிஸார் தெரிவித்தனர்.