திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்

விருது பெற்ற மூத்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் அமரசிறி கலன்சூரிய இன்று சனிக்கிழமை காலை காலமானார்.

அவர் தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.

1940 செப்டம்பர் 20 இல் பிறந்த நடிகர் அமரசிறி கலன்சூரிய இலங்கை சினிமாவில் முக்கிய ஒருவராக திகழ்ந்தவர்.