பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு

பெல்மடுல்ல புலத்வெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 40 வயதான பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பெல்மடுல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துஷ்மந்தி அபேரத்னவின் சடலம் அவரது படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலையில் வீட்டிற்கு வந்த பணிப்பெண் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். கடந்த 30ஆம் தேதி இரவு முதல் வழக்கறிஞரின் கணவர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.