
ஜப்பானிய பெண்களின் முக அழகுக்கு காரணம்?
ஜப்பானிய பெண்கள் பெரும்பாலும் தங்களது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெறும் முகப்பூச்சுகளை பூசி தங்களை அழகுபடுத்திக் கொள்வதை விட, இயற்கையான பாரம்பரிய முறையில் தங்களது சரும பாதுகாப்பு மேற்கொள்வது ஆரோக்கியமானது என்பது அவர்களது பாரம்பரிய நம்பிக்கையாகும்.
உடல் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் அழகாக வைத்துக் கொள்வதற்கு அவர்கள் தங்களது உணவு பழக்கவழக்கங்களிலும் அதிக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கின்றனர்.
ஆயில் க்ளன்சிங் : இது ஜப்பானியர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாகும். ஜப்பானியர்கள் பெரும்பாலும் தங்களது முகத்தை அழகாக வைத்திருக்க சரும பாதுகாப்பிற்காகவும் எண்ணையை பயன்படுத்தி முகத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் முறையை கடைப்பிடித்து வந்துள்ளனர். இவ்வாறு இரு முறை எண்ணையை பயன்படுத்தி ஆயில் க்ளன்சிங் செய்யும் போது முகத்தில் உள்ள முகப்பூச்சுகளை முழுவதுமாக நீக்குவதோடு சருமத்தில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது.
சரிவிகித உணவு கட்டுப்பாடு : உடலின் ஆரோக்கியமானது சருமத்தின் மூலம் வெளிப்படும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கையாகும். அதிகமாக உணவில் அக்கறை செலுத்தும் ஜப்பானியர்கள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இதன் மூலம் உடலில் நச்சுக்கள் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டு அழற்சி தன்மை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
பாரம்பரிய குளியல் முறை : ஜப்பானியர்கள் குளிப்பதை வெறும் உடலை சுத்தம் செய்யும் ஒரு செயல்முறையாக மட்டும் பார்க்காமல் அதை உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் ஒரு சிகிச்சை முறையாக பின்பற்றி வந்துள்ளனர்.
கிரீன் டீ : ஜப்பானியர்கள் பெரும்பாலுமே தினசரி கிரீன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் தன்மையானது நமது சருமத்தை பளபளப்புடன் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுவதோடு சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளையும் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாப்பதாக கூறப்படுகிறது.
அரிசி உணவு : ஜப்பானியர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவு வகைகளில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அரிசியை உட்கொண்டாலே போதும் என்பது அவர்களது நம்பிக்கை. தங்களது சரும பராமரிப்பு தலை முடியை பராமரிப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கும் சூரிய ஒளியில் வைக்கப்பட்ட அரிசியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
