
நுளம்பு திரி புகை சுவாசித்ததில் 6 பேர் பலி
நுளம்பு திரி புகை சுவாசித்ததில் 6 பேர் பலி
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மச்னி மார்க்கெட் அருகே வீடொன்றில் கொழுத்தி வைக்கப்பட்ட நுளம்பு திரி புகையின் மூலம் 6 பேர் பலியாகியுள்ளனர்.
மச்னி மார்க்கெட் அருகே உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் பொலிஸார் வீட்டில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 வயது சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதற் கட்ட விசாரணையின் போது இவர்கள் நுளம்பு திரியை கொளுத்தி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர் அது தவறி விழுந்து மெத்தையில் தீப்பற்றியுள்ளது, அறையின் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், அறையை சூழ்ந்த அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் மயங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
