இலங்கையில் மூவரில் ஒருவர் சோம்பேறி

இலங்கையில் மூவரில் ஒருவர் சோம்பேறி

இலங்கையில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலைக்கு முக்கிய காரணங்களாக தொலைக்காட்சி உபயோகிக்கும் பழக்கம், மடிக்கணினி பாவனை, கைத்தொலைபேசி அதிக நேரம் பயன்னபடுத்துகின்றமையே என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான தவறான பழக்கங்கள் மூலம் இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு தீர்வாக தினமும் உடற்பயிற்சி செய்ய ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் பல நோய்களைத் தடுக்க முடியும் என நிபுணர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்