அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : இரு வெளிநாட்டவர் உட்பட மூவர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று வியாழக்கிழமை இரவு லொறி ஒன்றுடன் வேன் மோதியதில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கிலோமீற்றர் பகுதிக்கு அருகில், மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்ற லொறியுடன் குறித்த வேன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, 25 வயதான வேனின் சாரதியும், 59 வயதான ரஷ்ய பெண் ஒருவரும் மற்றும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்