மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று வியாழக்கிழமை ஒரு கிலோ கரட் 90 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் விலை 80 ரூபாவாக குறைந்துள்ளது.

உருளைக்கிழங்கு, நுரைச்சோலை பொருளாதார நிலையத்தில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையிலும், மெனிங் சந்தையில் 100 ரூபாவிற்கும் குறைவான விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.

வெண்டைக்காயின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு காணப்பட்டதுடன், பல பொருளாதார நிலையங்களில் லீக்ஸ் மொத்த விற்பனை விலை 200 முதல் 260 ரூபா வரை பதிவாகியுள்ளது.

முட்டைகோஸ் விலை 65 முதல் 90 ரூபாய் வரை பதிவாகி உள்ளது

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் மொத்த விலை 140 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், நேற்று மெனிங் சந்தையில் நுவரெலியா உருளைக்கிழங்கு சுமார் 230 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ பூசணிக்காய் 35 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.