
பிலிப்பைன்ஸ் பயணிகள் படகில் தீ விபத்து 31 பேர் பலி
பிலிப்பைன்ஸ் பயணிகள் படகில் தீ விபத்து 31 பேர் பலி
பிலிப்பைன்ஸ் தீவில் பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு மாத குழந்தையொன்று உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பசிலன் தீவில் நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் தீப்பரவலின் போது, பெரும்பாலான பயணிகள் படகின் கீழ் தளத்திலுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை அந் நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
