
கிணற்று தண்ணீரில் பற்றி எரிந்த தீ
கிணற்று தண்ணீரில் பற்றி எரிந்த தீ
இந்தியா – கேரளா மாநிலம் கொல்லம் அஞ்சாலுமூட்டில் உள்ள 60 க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீ பற்றி எரிந்துள்ளது.
அஞ்சாலுமூட் பகுதியை சேர்ந்த ஸ்வர்ணம்மா என்பவரின் வீட்டில் உள்ள கிணற்று தண்ணீரில் திடீரென தீப்படித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அருகிலுள்ள பெட்ரோல் பம்பிலிருந்து கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீரை சீர்ப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
