இந்தியாவில் பிறந்த 4 சிவிங்கிப்புலி குட்டிகள்

இந்தியாவில் பிறந்த 4 சிவிங்கிப்புலி குட்டிகள்

இந்தியாவில் சிவிங்கிப்புலி இனம் அழிந்து விட்டதால், அதனை மீள் அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தது.

அதன் படி, ஆப்ரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 20 சிவிங்கிப்புலிகள் 2 கட்டங்களாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன.

அதில், பெண் சிவிங்கிப்புலி ஒன்று, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தது.

இந்நிலையில், ஒரு சிவிங்கிப்புலிக்கு 4 குட்டிகள் பிறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.இதன் மூலம் தற்போது இந்தியாவில் உள்ள சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்