வெயில் காலத்தில் உடல் வெப்பநிலையை குறைக்க வேண்டுமா?

வெயில் காலத்தில் உடல் வெப்பநிலையை குறைக்க வேண்டுமா?

இலங்கை ஒரு தீவாக இருந்தாலும் தற்போது நிலவும் அதிக வெப்பம் இலங்கை மக்களையும் விட்டு வைக்கவில்லை.

வெப்பத்தின் காரணமாக அதிகமாக சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. உடலில் இருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறன பிரச்சனைகளால் உயிராபத்துக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு.

உடல் வெப்பநிலையை குறைப்பதற்கு எமது மூத்தோர்கள் பல விடயங்களை எமக்கு தந்து விட்டு சென்றுள்ளனர்.

வெப்பநிலையை கட்டுப்படுத்தும் மூலிகைகளில் கற்றாளை முக்கிய இடம் வகிக்கிறது. கற்றாளை இயற்கையாகவே அதிக மூலிகை குணங்களை கொண்ட செடியாகும்.

கற்றாளையில் ஒரு துண்டு எடுத்து அதனை நன்றாக சுத்தம் செய்து அதன் தோலை நீக்கி விட்டு அதனுடன் ஒரு கப் தயிர், அரை கப் சீனி (தேவைக்கு ஏற்ப ) சேர்த்து நன்றாக (பிளென்ட் பண்ணவும்) கட்டி இல்லாமல் கலக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பானத்தை வாரத்தில் இரண்டு அல்லது ஒரு தடவை அருந்தி வர உடல் வெப்பநிலை சீராக பேணப்படும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்