துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 32 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மிதிகம குருபேபில பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை காரில் வந்த குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பலத்த காயங்களுடன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், படுகாயமடைந்த மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மிதிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.