
பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரான பௌத்த மதகுரு கைது
-பதுளை நிருபர்-
வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரான பௌத்த மதகுரு வெள்ளவாய பொலிஸாரினால் கைது.
வெள்ளவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் பௌத்த மதகுரு ஒருவரினால் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமையினால் ஆசிரியரான மதகுரு வெள்ளவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவனின் தந்தையினால் வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு அமையவே பாடசாலையின் ஆசிரியரான குறித்த பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவன் வெள்ளவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
