இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் பாரிய மாற்றம்
எரிபொருள் விலை திருத்தம் இன்று புதன்கிழமை இரவு 12 மணிக்கு மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
மேலும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 295 ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்திய தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20 பெற்றோலிய ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
