இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்-

இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பபட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 09 பாடசாலையில் இருந்து 202 மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் உறவுகளினால் மிகவும் வறுமைக் கோட்டிங்கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் 86  மாணவர்களுக்கு புத்தகப்பை என்பன நேற்று முன் தினம் சனிக்கிழமை  யாழ்ப்பாணம் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு கிளிநொச்சி வைத்திய சாலையின் உதவி மருத்துவர் த. ஜெகதீஸ்வரன், மருதங்கேனி கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்லத்துறை ஸ்ரீ இராமச்சந்திரன், பாடசாலையின் அதிபர்களான சிவபாதம் ஜெயந்திரன், சின்னத்தம்பி ரங்கனாதன், ஆசிரியர்களான கணேஸ்வரன் சந்திரகலா, சி. சுகந்தி, பகிஸ்வரன் சரிரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும் திருஇநவரத்தினம் ரூபரமேஷ், ஸ்ரீ கணேஷ் செலெக்க்ஷன் உரிமையாளர், திரு குகேந்திரான் மாரிமுத்து, திரு ரூபன் தருமலிங்கம். இவர்களின் தனிப்பட்ட நிதி பங்களிப்போடும்.இதனுடன் இணைந்து இணைந்த கரங்கள் உறவுகளின் பங்களிப்போடும் இந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்குவதற்கும் நிதிப் பங்களிப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாஃமருதங்கேணி இ.த.க பாடசாலை, யாஃஉடுத்துறை இ.த.க ஆரம்ப பாடசாலை, யாஃஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம், யாஃ உடுத்துறை ம.வி வித்தியாலயம், யாஃவெற்லைக்கேணி றோ.க பாடசாலை, யாஃகேவில் அ.த.க.பாடசாலை, யாஃதாளையடி றோ.க. பாடசாலை, யாஃகட்டைக்காடு றோ.க.பாடசாலை, யாஃவெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மற்றும் அதி கஸ்டத்தில் உள்ள 202 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இன் நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் இணைந்த கரங்கள் உறுப்பினர்களாகிய லோ.கஜரூபன், எஸ்.காந்தன், சி.துலக்சன், தெ.சிருஸ்காந், ரெட்ணசிங்கம் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்