
கடல் அட்டைகள் கடத்த முயற்சி செய்தவர்கள் மூவர் கைது
கடல் அட்டைகள் கடத்த முயற்சி செய்தவர்கள் மூவர் கைது
இலங்கைக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை சட்டவிரோதமாக அனுப்பப்படவிருந்த ஒரு டன் கடல் அட்டைகளை தமிழக கடலோர பொலிஸார் பறிமுதல் செய்துடன் மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை, சீனா,ஜப்பான், இந்தோனேசியா, மற்றும் வேறு சில தூர கிழக்கு நாடுகளில் கடலட்டை உணவுப் பொருளாகவும், மருத்துவ துணைப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்திய பொலிஸார் மற்றும் வன வளத்துறை அதிகாரிகளின் அறிக்கையின் படி, இந்தியாவில் ஒரு மெட்றிக் டன் கடலட்டையின் பெறுமதி சுமார் 30,000 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
பதப்படுத்திக் கடலட்டைகளை இலங்கைக்கு கடத்த முயற்சித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
