
மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
மட்டக்களப்பு இரத்த வங்கியும், மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயமும் இணைந்து, 2003ம் ஆண்டு க.பொ.தராதர சாதாரண தர மாணவர்களின் அனுசரணையுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை “உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்” எனும் தொனிப் பொருளில் இரத்தான முகாமை முன்னெடுத்துள்ளனர்.
இதில் மாங்காடு கிராமத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களும், இப்பாடசாலையின் தற்போதைய பழைய மாணவர் சங்க செயலாளரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் பல இரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இந்நிகழ்வானது இப்பாடசாலையின் 100வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை வளாகத்தில் இடம்பெறுவது குறிப்பிடதக்கது.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

