உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு

உயர் நீதிமன்றத்தில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவை முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் காவலில் உள்ளவர்கள், பல்வேறு விசாரணைகளுக்காக, வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில், துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு வழிகாட்டல் கோவையை தயாரிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

எனினும், அதனை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில், அடுத்த மாதம் 3ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி இது பற்றி விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்களான எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய குழாம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்