
சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்றவர் கைது
-பதுளை நிருபர்-
சட்டவிரோதமான முறையில் மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றிச்சென்றவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளை தம்பேதல பகுதியில் இருந்து வெலிமடை பகுதிக்கு லொறி ஒன்றில் 3 பசு மாடுகள் மற்றும் ஒரு காளை மாடு ஆகியவற்றை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற வேளை குறித்த லொறியை ஹப்புத்தளை பகுதியில் வைத்து பண்டாரவளை விசேட பொலிஸ் பிரிவினர் சோதனையிட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாடுகளும் லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மாடுகள் மற்றும் லொறி ஆகியவை ஹப்புத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்டவற்றை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
