
10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
சதொச விற்பனை நிலையங்களில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி,
ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 199 ரூபா
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு 210 ரூபா
ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு 298 ரூபா
ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 270 ரூபா
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 119 ரூபா
தகரப் பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 520 ரூபா
ஒரு கிலோகிராம் கடலையின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 555 ரூபா
ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 100 ரூபா
ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபா
ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 380 ரூபா, என விற்பனை செய்யப்படுகின்றது.
