
கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் 25 பேர் காயம்
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் லெய்த் என்ற பகுதியில் அமைந்த கப்பல் நிறுத்தும் இடத்தில் பெட்ரல் என்ற கப்பல் திடீரென சரிந்து விளுந்ததில் 25 பேர் வரை காயம் அடைந்தனர்.
பயணிகளுடன் நின்றுகொண்டிருந்த பெட்ரல் என்ற ஆராய்ச்சி கப்பல் திடீரென சரிந்தது விளுந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி, 25 பேர் வரை காயம் அடைந்தனர். அவர்களில் 15 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 10 பேருக்கு அதே இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், பொலிஸாரினால் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் கப்பல் சரிந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
