
போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லை
-யாழ் நிருபர்-
தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லலை என சாம் ராஜசூரியர் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் யாரையும் இங்கு மதம் மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யவில்லை. கடவுள் மனிதனுடைய உள்ளத்தை மாற்றுகின்றார்.
மதம் மாறுமாறு நாம் ஒருபோதும் போதித்ததில்லை, கடவுள் எங்களுடைய உள்ளத்தை மாற்றுகின்றார் என்பதைத்தான் போதிக்கின்றோமே தவிர மதமாற்றம் தொடர்பில் எந்த கூட்டமும் நடத்தமுனையவில்லை.
போல் தினகரன் யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்கள் இறை ஆசீர்வாத நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தவிர்க்க முடியாத சூழ்நிலையினால் அந்த நிகழ்வுகளை பிற்போட நேரிட்டிருக்கின்றது.
எனினும் எதிர்காலத்தில் உரிய அனுமதிகளோடு அந்த நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
