
ஜப்பானில் தொழில்வாய்ப்பு எனக்கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர்
ஜப்பானில் தொழில்வாய்ப்பு எனக்கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர்
நாட்டின் பல பகுதிகளில் ஜப்பானில் தொழில்வாய்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கடுகண்ணாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இம் முறைப்பாடுகளை தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 வயதுடைய பிலிமத்தலாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் ஜப்பானில் தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்து 14 இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
