பளையில் பொலிஸார் இருவர் மாயம்

 

பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று புதன்கிழமை கடமையின் நிமித்தம் வெளியில் சென்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்று இரவு நேர கடமைக்காக பளை பிரதேச புதுக்காட்டு சந்தி பகுதிக்கு சென்ற சமயமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது நேற்று இரவு 8.00மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் குறித்த பொலிசார் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையெனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.