அம்பாறை இளைஞர்கள் நால்வரும் சடலமாக மீட்பு
வெல்லவாய நீர் வீழ்ச்சியில் காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஒருவருடைய சடலமும், இன்று காலை ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை, சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு நீராடச் சென்ற போது காணாமல் போனவர்கள் ஆவர்.
தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சுமார் 10 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்றே சுற்றுலா சென்றபோது இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
