
மாணவியை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த காதலன்
கொழும்பில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது..
குறித்த மாணவியுடன் இளைஞன் காதல் உறவைப் பேணி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு மத்தியப் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினால் சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரான இளைஞனுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த 17 வயதுடைய மாணவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள செல்வந்த வர்த்தகரின் மகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேலையில்லாதவர் என தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மகள் சுமார் 6 ஆண்டுகளாக இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது முறைப்பாட்டில் தாயார் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலமுறை எச்சரித்தும் மகள் உறவை நிறுத்தவில்லை என மாணவியின் தாயார் பொலிஸாரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெறுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
