
நாட்டின் சில பிரதேசங்களில் மழை
நாட்டின் சில பிரதேசங்களில் இன்றைய தினம் மழை
சப்ரகமுவ, மத்திய ஊவா, மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பொலநறுவை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டத்தில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
