ருஹூணு பல்கலை விவகாரம்: இரு மாணவர்கள் கைது

ருஹூணு பல்கலை விவகாரம்: இரு மாணவர்கள் கைது

ருஹுணு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட இரு மாணவர்கள் இன்று செவ்வாய்கிழமை காலை கம்புருபிட்டிய பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு விடுதி காப்பாளருக்கும் கம்புருபிட்டிய தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விடுதி காப்பாளர் மாணவர்களால் தாக்கப்பட்டார்.

குறித்த இரண்டு மாணவர்களும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு மாணவர்களும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவர்கள் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இன்று செவ்வாய்கிழமை கொட்டவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்